ஜனகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவ வில்லை உடைக்கும் இராமரை காணும் ஜனகர்

ஜனகர் என்பவர் மிதிலாபுரி என்கிற நாட்டின் அரசனாவார். இவர் மனைவியின் பெயர் சுனைனா.இவர் இராமாயண காவிய நாயகி சீதையின் தந்தையாவார். அத்துடன் இலட்சுமணனின் மனைவியான ஊர்மிளாவின் தந்தையும் இவரே.

ஜனகரின் மகள் என்பதாலேயே சீதைக்கு ஜானகி என்ற பெயர் கிடைத்தது.

ஜனகர் எனும் சொல்லுக்கு தந்தை என்று பொருள்.[1]

சிவதனுசின் கதை[தொகு]

தட்ச பிரகஸ்பதியின் யாகத்தில் தன்னை மாய்த்துக்கொண்டாள் சதி தேவி். அதனால் கோபமுற்ற சிவபெருமான் தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட அத்தனை தேவர்களையும், அழிப்பதற்காக சிவதனுசினை எடுத்து அம்பினை பூட்டினார். அதற்குள் தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் தங்களைக் காக்க வேண்டினர். அதனால் சிவபெருமான் மனம் மாறி, சிவதனுசினை தேவர்களின் மூத்தவரான தேவராதன் என்பவருக்கு அளித்தார்.

அந்த சிவதனுசை தேவராதம் வம்சத்தில் பாதுகாத்துவந்தார்கள். தேவராதம் மறையும் போது, அவர் சந்ததிகள் அதனை பாதுகாத்துவந்தார்கள். சிவதனுசின் மேன்மை புரிந்தவர்கள் வம்சத்தில் ஜனகர் தோன்றியதால், அவருக்கு சிவதனுசு கிடைத்தது.

ஜனகர் மகா யாகம் செய்த சமயம் வருணன் ஜனகரின் யாகத்தைப் போற்றி ருத்திர வில் (சிவ தனுசு) மற்றும் இரண்டு அம்புறாத் தூணிகளையும் ஜனகருக்குத் தந்திருந்தான். [2]

சுயம்வரம்[தொகு]

சீதைக்கு சுயம்வரம் மிதுலை நாட்டில் பெரும் விழாவாக நடைபெற்றது. சிவபெருமானிடம் இருந்து ஜனகருக்கு கிடைக்கப்பெற்ற சிவதனுசில் எந்த மன்னர் நாண் பூட்டுகின்றாரே, அவருக்கே சீதை என்று அறிவித்தார் ஜனகர். [3] அப்போது விஸ்வாமித்திர முனிவருடன் இராமனும், இலக்குவனும் அங்கு வந்தார்கள்.

சிவதனுசை நாண்பூட்டி உடைத்தார் இராமர். அதனால் சீதையை இராமருக்கு திருமணம் செய்துதந்தார் ஜனகர்.

கருவி நூல்[தொகு]

காண்க[தொகு]

http://valmikiramayanam.in/

ஆதாரம்[தொகு]

  1. எழுந்திரு! விழித்திரு! ; பகுதி 7; பக்கம் 75
  2. இராமாயணம்; சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியர்; பக்கம் 44
  3. http://valmikiramayanam.in/?tag=seetha-kalyanam
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனகர்&oldid=2902749" இருந்து மீள்விக்கப்பட்டது