சூரியனார் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூரியனார் கோவில்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Tamil Nadu" does not exist.
ஆள்கூறுகள்: 11°1′47″N 79°28′40″E / 11.02972°N 79.47778°E / 11.02972; 79.47778ஆள்கூற்று: 11°1′47″N 79°28′40″E / 11.02972°N 79.47778°E / 11.02972; 79.47778
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்: தமிழ் நாடு
மாவட்டம்: தஞ்சாவூர்
அமைவு: மருத்துவக்குடி, ஆடுதுறை
கோயில் தகவல்கள்
மூலவர்: சூரியனார் (சூரியன்)
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு கிழக்கே கும்பகோணம்-பூம்புகார் சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. ஆடுதுறை இரயில் நிலையத்தில் இறங்கி அணைக்கரை செல்லும் பேருந்தில் ஏறி இக்கோவிலை அடையலாம். திருமங்கலக்குடி காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்றுத் தொலைவு நடந்து கோவிலை அடையலாம். இந்த கோவில் ஒன்பது நவக்கிரகக்கோயில்களில் முதன்மையானதாகும்.

வரலாறு[தொகு]

கோவிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து இக்கோவில் குலோத்துங்கச்சோழரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என தெரிய வருகிறது(கி.பி 1060 - 1118).[1]

கட்டிடக்கலை[தொகு]

சூரியனார் கோயில் தலம் கும்பகோணத்திற்கு கிழக்கே அமையப் பெற்றுள்ளது கும்பகோணம் - மயிலாடுதுறை சாலைக்கும் ஆடுதுறைக்கும் இடையே 2 km (1.2 mi) தூரம் உள்ளது. திருபனந்தாள் மற்றும் கீழ் அனைக்கட்டிலிருந்து நேரடி சாலை வசதி உள்ளது. இக்கோயில் நான்கு பிரகாரங்களுடன் கூடிய சுற்று சுவருடன் நடுவே ராஜகோபுரத்துடன் எழும்பியுள்ளது. .

விபரங்கள்[தொகு]

  • இறைவன் : சூரியன்
  • தல விருட்சம்;எருக்கு
  • நிறம் : சிவப்பு
  • வச்திரம்: சிவப்புத் துணி
  • மலர்: தாமரை மற்றும் எருக்கு
  • இரத்தினம்: ரூபி
  • தான்யம் : கோதுமை
  • வாகனம்: ஏழு குதிரைகள் பூட்டிய தேர்
  • உணவு: சர்க்கரைப் பொங்கல், ரவை மற்றும் கோதுமை

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Suriyanar temple". Dinamalar (2011). பார்த்த நாள் 13 September 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியனார்_கோவில்&oldid=2661903" இருந்து மீள்விக்கப்பட்டது