நமசிவாய மூர்த்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நமசிவாய மூர்த்திகள் திருவாவடுதுறை ஆதீனத்தை கி.பி 14 ஆம் நூற்றாண்டில் தோற்றுவித்தவர் ஆவார்.

இளமைப் பருவம்[தொகு]

இவர் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மூவலூரில் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வைத்தியநாதன்.இவர் குரு சித்தர் சிவப்பிரகாசர்.ஒரு நாள் வீதி வழியே சென்ற வைத்தியநாதனைக் கண்ட சிவப்பிரகாசர் அவரைத் தன்னுடன் அழைத்து திருவாவடுதுறை வந்தார்.அவரது ஆன்மீக ஈடுபாடு அறிந்து,அவருக்குத் தீட்சை அளித்தார்.அதோடு,நமசிவாயம் எனும் பெயரையும் சூட்டினார். சிவப்பிரகாசர் தாம் வீற்றிருந்த இடத்தில் ஓர் அறை அமைந்து அங்கு இருந்து சித்தாந்த மரபு தழைக்க,சிவஞான உபதேசம் செய்துவர ஆணையிட்டார்.

குருபரம்பரை[தொகு]

திருவாவடுதுறை ஆதீனக் குருபரம்பரை வளர்ந்தோங்க வேண்டும் என்பதற்காக நமசிவாயமூர்த்திகள்,மறைஞான தேசிகருக்கு ஆசாரிய அபிடேகம் செய்து இளவரசாக நியமித்தார்.மறைஞானர் தம் குருவின் நாமம் சொல்லிய படியே நிட்டைக்(முக்தி) கூடினார்.அவர் நிட்டைக் கூடிய இடத்திற்கு மறைஞான தபோவனம் என்ற பெயர் உண்டாயிற்று.

சமாதி கூடல்[தொகு]

நமசிவாய மூர்த்திகள் ஓர் தை மாதத்து அசுபதி நன்னாளில் முக்தி பெற்றார்.அவர் முக்தி பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்தில் ஞானசமாதித் திருக்கோயில் எழுப்பப்பெற்று தினமும் காலை,மாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.ஆண்டுதோறும் தைமாதம் 10 நாள்கள் சுவாமிகளின் குருபூஜையும் நடைபெற்று வருகின்றது.

மேற்கோள்[தொகு]

1) மு.அருணாசலம்,"தமிழ் இலக்கிய வரலாறு"14 ஆம் நூற்றாண்டு - பக்கம்-128.

உசாத்துணை[தொகு]

பூசை.சுப்பிரமணியத்தம்பிரான்,"குருபரம்பரை விளக்கம்" திருவாவடுதுறை ஆதீனம். திரிசக்தி,தீபாவளி மலர்-2010, பக்கம்-158.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நமசிவாய_மூர்த்திகள்&oldid=2758068" இருந்து மீள்விக்கப்பட்டது