உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை"புதியதோர் உலகம் செய்வோம்"
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
We will create a brave new world
வகைஅரசு நிறுவனம்
உருவாக்கம்1982
வேந்தர்ஆர். என். ரவி[1]
துணை வேந்தர்முனைவர் எம். செல்வம்[2]
பட்ட மாணவர்கள்2000 (2005)
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்500
அமைவிடம், ,
வளாகம்நகரம் சார் பகுதி
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)
இணையதளம்www.bdu.ac.in

பாரதிதாசன் பல்கலைக்கழகம் (Bharathidasan University) தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் புரட்சிக்கவி பாரதிதாசன் பெயரால் நிறுவப்பட்டது. இதன் குறிக்கோளாக புதியதோர் உலகம் செய்வோம் என்னும் பாரதிதாசனின் பொன்மொழிகளை ஏற்று செயற்பட்டு வருகிறது. இந் நிறுவனம் 2006–07 ஆம் ஆண்டு தனது வெள்ளி விழாவைக் கொண்டாடியது.

இப்பல்கலையின் மைய வளாகம் முதலில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்கலைப்பேரூர், திருச்சியில் தொடங்கப்பட்டது. பின்னர் இதன் தெற்கு வளாகம் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கும் அதனைத் தொடர்ந்து இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கும் முறையே பகிர்ந்தளிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் மற்றொரு வளாகம் நகர்ப்புறத்தில் காஜாமலை என்னும் பகுதியில் அமையப்பட்டுள்ளது. இது முன்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருச்சி முதுநிலை மையமாக இயங்கிவந்தது.

இப்பல்கலைக்கழகத்திற்கு பெங்களூரு, தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் கழகத்தினால் "ஏ" கிரேடு வழங்கப்பட்டுள்ளது.

கட்டமைப்பு

[தொகு]

இதன் நிர்வாகம் சார்ந்தப் பகுதிகளான துணைவேந்தர் செயலகம், பதிவாளர் அலுவலகம், நிதி மற்றும் தேர்வு அலுவலகம், பெரும்பான்மையான துறைகள் மற்றும் ஆய்வுக்கூடங்கள் பல்கலையின் மைய வளாகமான பல்கலைப்பேரூரிலேயே அமையப்பட்டுள்ளது. இவ்வளாகத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், அடிப்படை மருத்துவயியல், புவியியல், சமுகவியல், கடலியல் மற்றும் மொழியியற் பள்ளிகளும், மேலும் மைய நூலகம், விடுதி, தகவலியற் மையம், பணியாளர் மனைகள், நலவிடுதி, உணவகம் எனப் பல அமையப்பெற்றுள்ளன.

இதன் நகர வளாகமான காஜாமலையில், பொருளியல்,சமூகப்பணி, கணினியல் மற்றும் தொலையுணர்தல் பள்ளிகளும், கல்விப்பணியாளர் கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன. இதனைத் தவிர்த்து பாரதிதாசன் தொலைக்கல்வி மையம் பல்கலைப்பேரூரிலும், பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், திருவெரும்பூரிலும் இயங்கி வருகின்றன.

இயக்கம்

[தொகு]

இப்பல்கலைக் கழகம் 4 கல்விமுறைத் தொகுதிகளாகப் பகுக்கப்பட்டு, 16 பள்ளிகள், 34 துறைகள், 11 ஆய்வு மையங்கள், 195 கல்விப்பணியாளர்கள், 2300 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு இயங்கிவருகிறது. இப்பலகலையின் துறைகள்/பள்ளிகளில் 177 திட்டங்களுக்குட்பட்ட 40 முதுநிலைத் திட்டமும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்வி நிறுவனத்தில் திருச்சியை ஒட்டிய 8 மாவட்டங்களில் இருக்கும் 123 கல்லூரிகளில் ஆட்சிச் செலுத்திவருகிறது. அதில் 123 கலை மற்றும் அறிவியற் கல்லூரிகளும், 3 நுண்கலைக் கல்லூரிகளும் அடங்கும். இவற்றுள் 8 அரசுக் கல்லூரியும் 11 அரசு உதவிக்கல்லூரிகளும் தன்னாட்சி நிறுவனங்களாக செயற்பட்டு வருகின்றன. இதைத் தவிர்த்து 8 பல்கலைக்கழகக் உறுப்புக்கல்லூரிகளும் நடத்திவருகிறது.

பல்கலைகழகத்தின் கீழ் கல்லூரிகள் உள்ள மாவட்டங்கள்

[தொகு]

தன்னாட்சிக் கல்லூரிகள்

[தொகு]
வ.எண் கல்லூரியின் பெயர் துவக்க ஆண்டு இடம் மாவட்டம்
01 புனித சூசையப்பர் கல்லூரி 1844 திருச்சி திருச்சி
02 அரசினர் கலைக் கல்லூரி, கும்பகோணம் 1854 கும்பகோணம் தஞ்சாவூர்
03 ஹோலி கிராஸ் கல்லூரி 1923 திருச்சி திருச்சி
04 ஜமால் முகமது கல்லூரி 1951 திருச்சி திருச்சி
05 சீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரி 1951 திருச்சி திருச்சி
06 மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி 1955 தஞ்சாவூர் தஞ்சாவூர்
07 ஏ. வி. சி. கல்லூரி 1955 மன்னம்பந்தல் மயிலாடுதுறை
08 அருள்மிகு வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புட்பம் கல்லூரி 1956 பூண்டி தஞ்சாவூர்
09 பிஷப் ஹீபர் கல்லூரி 1966 திருச்சி திருச்சி
10 நேரு நினைவுக் கல்லூரி 1967 புத்தனாம்பட்டி திருச்சி

பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகள்

[தொகு]

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

[தொகு]
  1. பாவேந்தர் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி
  2. தேசியக் கல்லூரி, திருச்சி
  3. அரசினர் கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, துவாக்குடி (முன்னர் நாவலர் நெடுஞ்செழியன் அரசினர் கலைக்கல்லூரி)
  4. அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, முசிறி
  5. அய்மான் மகளிர் கல்லூரி
  6. மாடர்ன் கலை அறிவியல் கல்லூரி
  7. நேரு நினைவுக் கல்லூரி, புத்தனாம்பட்டி
  8. பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
  9. புனித சூசையப்பர் கல்லூரி, திருச்சி (இது சென்னைப் பல்கலைக்கழகத்தினின்றும் பழமையானதாகும்)
  10. ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  11. உருமு தனலட்சுமி கல்லூரி,காட்டூர்
  12. கலைக்காவிரி கவின்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
  13. காவேரி மகளிர் கல்லூரி
  14. கிருத்துராஜ் கல்லூரி
  15. சீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரி, திருச்சி
  16. செட்டிநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  17. புனித சிலுவை கல்லூரி, திருச்சிராப்பள்ளி
  18. தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி
  19. ஸ்ரீமதி இந்திராகாந்தி மகளிர் கல்லூரி
  20. தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரி
  21. எம். ஐ. இ. டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பெரம்பலூர் மாவட்டம்

[தொகு]

அரியலூர் மாவட்டம்

[தொகு]

கரூர் மாவட்டம்

[தொகு]

புதுக்கோட்டை மாவட்டம்

[தொகு]

தஞ்சாவூர் மாவட்டம்

[தொகு]

திருவாரூர் மாவட்டம்

[தொகு]

நாகப்பட்டிணம் மாவட்டம்

[தொகு]
  1. டி.ஜி. அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, நாகப்பட்டினம்
  2. A.D.M. மகளிர் கல்லூரி, நாகப்பட்டினம்
  3. A.R.C. விஸ்வநாதன் கல்லூரி, மயிலாடுதுறை
  4. ஏ. வி. சி. கல்லூரி (தன்னாட்சி), நாகப்பட்டினம்
  5. பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சீர்காழி
  6. தர்மபுரம் ஆதினம் கலைக் கல்லூரி, நாகப்பட்டினம்
  7. இ.ஜி.எஸ்.பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாகப்பட்டினம்
  8. பூம்புகார் கல்லூரி, நாகப்பட்டினம்
  9. விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. https://timesofindia.indiatimes.com/city/chennai/m-selvam-appointed-vice-chancellor-bharathidasan-university/articleshow/80689626.cms

வெளியிணைப்பு

[தொகு]