பூம்புகார் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லூரி நுழைவாயில்

பூம்புகார் கல்லூரி, தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் மேலையூரில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாடு அரசு  1964இல் இந்தக் கல்லூரியை நிறுவியது. கல்லூரி காலை மற்றும் மாலை நேர கல்லூரியாக இயங்குகிறது. இக்கல்லூரி இளங்கலை படிப்புகள், முதுகலை  படிப்புகள்  மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்குகிறது. 1990-91ஆம் கல்வி ஆண்டு முதல் இருபாலரும் படிக்கும்  இணை கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 

போக்குவரத்து[தொகு]

இக்கல்லூரிக்கு, மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து செல்லும் வசதி உள்ளது. மயிலாடுதுறை மற்றும் மேலையூருக்கு இடையேயான இடைவெளி 23 கிலோமீட்டர் ஆகும். இக்கல்லூரிக்கு அருகிலுள்ள மயிலாடுதுறை  இரயில்வே சந்திப்பு, கல்லூரியில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு கருவிழந்தநாகபுரம் (கருவி) கல்லூரியில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது. அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் கல்லூரியை அடையலாம்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூம்புகார்_கல்லூரி&oldid=3936914" இலிருந்து மீள்விக்கப்பட்டது