அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம் மதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அண்ணா பல்கலைக்கழகம், மதுரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மதுரை (Anna University of Technology, Madurai) தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள மதுரை மாநகரில் 2010ஆம் ஆண்டு அரசாணை ஒன்றின் மூலம் நிறுவப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆறு கிளைகளில் ஒன்றாக விளங்குகிறது. தென்தமிழ்நாட்டில் உயர்கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 36 கல்வி நிறுவனங்களின் 15000 மாணவர்கள் படிக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழக வளாகம் மதுரை (அழகர் கோவில் சாலை), ராமநாதபுரம் (புல்லாங்குடி) மற்றும் திண்டுகல்(ரெட்டியார் சத்திரம், மாங்கரைப் பிரிவு)லில் இயங்குகிறது. தவிர, மதுரை, காரைக்குடி நகரங்களில் தன்னாட்சி பெற்ற அரசினர் கல்லூரிகளும் காரைக்குடியில் மத்திய மின்வேதியியல் ஆய்வு மையமும் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ளன. தற்போது 17 பட்டப்படிப்பு பாடதிட்டங்களையும் 21 பட்டமேற்படிப்பு பாடத்திட்டங்களையும் நடத்தி வருகிறது.

இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக முனைவர்.ஆர்.முருகேசன் பொறுப்பாற்றி வருகிறார்.

வெளியிணைப்புகள்[தொகு]