தண்டந்தோட்டம் நடனபுரீசுவரர் கோயில்
தோற்றம்
தண்டந்தோட்டம் நடனபுரீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]
அமைவிடம்
[தொகு]கும்பகோணம் வட்டம் கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநாகேஸ்வரம் அருகே 4 கி.மீ. தொலைவில் தண்டந்தோட்டம் உள்ளது.
இறைவன்,இறைவி
[தொகு]இங்குள்ள இறைவன் நடனபுரீசுவரர் ஆவார். இறைவி சிவகாமசுந்தரி ஆவார்.[1]
பிற சன்னதிகள்
[தொகு]முன் மண்டபத்தில் நேரில் இறைவி சன்னதி உள்ளது. திருச்சுற்றில் சித்தி விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன.[1]