திருநெல்வேலி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருநெல்வேலி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [கு 1] [1]

அமைவிடம்[தொகு]

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி நகரில் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி பூந்துறை என்றும் சிந்து பூந்துறை என்றும் அழைக்கப்படுகிறது. அப்பகுதியில் இக்கோயில் உள்ளது. [1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் சுந்தரேசுவரர் ஆவார். இறைவி மீனாட்சி ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

இச்சிறிய கோயிலின் வெளிச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், நடராச சபை சன்னதிகள் உள்ளன. மூலவருக்குப் பக்கத்தில் இறைவி சன்னதி உள்ளது. [1]

குறிப்புகள்[தொகு]

  1. குமரகுருபரன் 1972 பிப்ரவரி இதழில் இத்தலம் வைப்புத்தலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009