தக்களூர் திருலோகநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தக்களூர் திருலோகநாதர் கோயில் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

மயிலாடுதுறை-பேரளம்-காரைக்கால் சாலையில் திருநள்ளாற்றினை அடுத்து 1 கிமீ தூரத்தில் வலப்புறத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் திருலோகநாதர் ஆவார். இறைவி தர்மசம்வர்த்தினி ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

முன் மண்டப மூலையில் பைரவர், சந்திரன் உள்ளனர். வெளிச்சுற்றில் விநாயகர், விசுவநாதர் சிவலிங்கம், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009