ஆதி அண்ணாமலையார் கோயில்
| ஆதி அண்ணாமலையார் கோயில் | |
|---|---|
வார்ப்புரு:Location map தமிழ்நாடு-இல் அமைவிடம் | |
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | திருவண்ணாமலை |
| அமைவிடம்: | திருவண்ணாமலை |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | ஆதி அண்ணாமலையார் |
| தாயார்: | ஆதி அபிதகுசலாம்பாள் |
| சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
| கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
ஆதி அண்ணாமலையார் கோயில் என்பது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]
அமைவிடம்
[தொகு]இக்கோயில் திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் அமைந்துள்து. [2] [3] இத்தலம் தேவார வைப்புத் தலமாகப் போற்றப்படுகிறது.[2] இச்சிவாலயம் அண்ணாமலையார் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ளது. [2] இக்கோயிலை அடி அண்ணாமலையார் கோயில் என்றும் அழைப்பர். [4]
இறைவன், இறைவி
[தொகு]இத்தலத்தின் மூலவர் ஆதி அண்ணாமலையார் என்றும், அம்பாள் ஆதி அபிதகுசலாம்பாள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.[2]
பிற சன்னதிகள்
[தொகு]திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை ஆறுகப் பெருமான் மற்றும் எண்ணற்ற இலிங்கங்கள் உள்ளன. இக்கோயிலில் அங்க மண்டபம் உள்ளது. அத்துடன் உண்ணாமலை எனும் தீர்த்தமும் அமைந்துள்ளது. [2]
பிற சிறப்புகள்
[தொகு]இத்தலத்திலிருந்து அருணாசலேஸ்வரரை பார்ப்பதை சிவயோக முக தர்ஷன் என்று அழைக்கின்றனர்.[2] திருமூலர் இந்த தலத்திருந்து அவ்வாறு தரிசித்துள்ளாக கூறப்படுகிறது. [2] மாணிக்கவாசகர் திருவெம்பாவை இத்தலத்தில் இயற்றியுள்ளார். இத்தலத்திற்கு வருகின்ற வழியில் மாணிக்கவாசருக்கான கோயிலும் அமைந்துள்ளது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
- 1 2 3 4 5 6 7 "அருள்மிகு ஆதி அண்ணாமலையார் திருக் கோவில் - அடி அண்ணாமலையார் (திருவண்ணாமலை)". Archived from the original on 2020-06-22. Retrieved 2016-08-27.
- ↑ "ஆதி அருணாசலேஸ்வரர் கோயிலில் பாலாலய விழா".
- ↑ "திருவண்ணா மலை கிரிவலம்".