உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்கழுக்குன்றம் உருத்திரகோடீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருத்திரகோடீசுவரர் கோயில்
உருத்திரகோடீசுவரர் கோயில் is located in தமிழ்நாடு
உருத்திரகோடீசுவரர் கோயில்
உருத்திரகோடீசுவரர் கோயில்
தமிழ் நாடு-இல் அமைவிடம்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவிடம்:திருக்கழுக்குன்றம்
கோயில் தகவல்
மூலவர்:உருத்திரகோடீசுவரர்
தாயார்:திரிபுரசுந்தரி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

திருக்கழுக்குன்றம் உருத்திரகோடீசுவரர் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

திருக்கழுக்குன்றத்தில், அடிவாரக்கோயிலுக்கு நேர்வீதியில் உள்ள சங்கு தீர்த்தக் குளக்கரையின் கோடியில் இடது புறத்தில் திரும்பும்போது உள்ள கரை வழியே கோடியில், வலது புறம் பிரியும் சாலையில் ஊரின் பகுதி காணப்படும். வீதியின் கோடியில் வலது புறத்தில் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் உருத்திரன் கோயில், ருத்திரன் கோயில், ருத்ராங்கோயில் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

இறைவன்,இறைவி

[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் உருத்திரகோடீசுவரர் ஆவார். இறைவி திரிபுரசுந்தரி ஆவார். [1]

சன்னதிகள்

[தொகு]

இறைவன் கிழக்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009