திருச்சிற்றம்பலம் புராதனவனேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருச்சிற்றம்பலம் புராதனவனேசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சிற்றம்பலத்தில் அமைந்துள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தில் அறந்தாங்கி சாலையில் அமைந்துள்ளது.[2]

இறைவன், இறைவி[தொகு]

இங்குள்ள புராதனவனேசுவரர் ஆவார்.மூலவர் தானே தோன்றிய மேனியாக உள்ளார். பழமை என்ற பொருளின்படி, புராதன என்ற அடைமொழியைக் கொண்டு அவர் விளங்குகின்றார். இறைவி பெரியநாயகி. [2]

பூ விழுங்கி விநாயகர்[தொகு]

இக்கோயிலில் அம்மன் சன்னதியை வலம் வரும் இடத்தில் பூ விழுங்கி என்ற பெயரில் விநாயகர் உள்ளார். அம்மன் சன்னதியை வலம் வருவோர் விநாயகரின் காதில் உள்ள சிறிய துளையில் ஒரு பூவினைச் செருகிவிட்டு, கோரிக்கை வைத்துவிட்டு சுற்றி வரும்போது அந்த பூ விநாயகரின் காதுக்குள் போய்விடுவதாக அதனால் தமக்கு அருள் கிடைத்ததாக மக்கள் நம்புகின்றனர். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. 2.0 2.1 2.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014