உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தநல்லூர் வட தீர்த்தேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அந்தநல்லூர் வட தீர்த்தேசுவரர் கோயில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

[தொகு]

திருச்சி கரூர் சாலையில் ஜீயபுரத்தை அடுத்து திருச்செந்துறை உள்ளது. அதனை அடுத்து 1 கிமீ தொலைவில் உள்ள அந்தநல்லூரில் இக்கோயில் உள்ளது.

இறைவன், இறைவி

[தொகு]

இறைவன் வட தீர்த்தேசுவரர் என்றும் ஆலந்துறை மகாதேவர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி பாலசுந்தரி என்றும் பால சௌந்தர நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். [1]

திருச்சுற்று

[தொகு]

பராந்தக சோழன் காலத்திய கற்றளியாக இக்கோயிலின் திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர், சூரியன், சந்திரன் சன்னதிகள் உள்ளன. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009