மணக்கால் ஐயம்பேட்டை அகத்தீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணக்கால் ஐயம்பேட்டை அகத்தீசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

திருவாரூர்-கும்பகோணம் சாலையில் 8 கிமீ தொலைவில் மணக்கால் பெயர்ப்பலகையுள்ளது. அதன் எதிர்ப்புறமாக இடப்புறம் பிரிவும் வழியில் கோயில் உள்ளது.

இறைவன்,இறைவி[தொகு]

இங்குள்ள இறைவன் அகத்தீசுவரர் ஆவார். இறைவி சௌந்தரநாயகி ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

மேற்கு நோக்கிய நிலையில் மூலவர் சன்னதி உள்ளது. இடது புறம் இறைவி சன்னதி உள்ளது. மண்டபத்தில் பைரவர், சனி, சந்திரன் ஆகியோர் உள்ளனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009