உள்ளடக்கத்துக்குச் செல்

கொழையூர் அகஸ்தீஸ்வரர் மற்றும் வரதராஜப்பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மயிலாடுதுறை
அமைவிடம்:கொழையூர், குத்தாலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பூம்புகார்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:அகஸ்தீஸ்வரர்
தாயார்:அபிராமி
வரலாறு
கட்டிய நாள்:நான்காம் நூற்றாண்டு[சான்று தேவை]

கொழையூர் அகஸ்தீஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், கொழையூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். இவ்வூர் குழையூர் என்று தற்போது அழைக்கப்படுகிறது.[2]

வரலாறு

[தொகு]

இக்கோயில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் அகஸ்தீஸ்வரர், அபிராமி சன்னதிகளும், விநாயகர், சுப்ரமணியன், காசி விசுவநாதர், சண்டீகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.