கொத்தங்குடி கோடீசுவரர் கோயில்
தோற்றம்
| கோடீசுவரர் கோயில் | |
|---|---|
கோடீசுவரர் கோயில், கொத்தங்குடி, மயிலாடுதுறை மாவட்டம் | |
| ஆள்கூறுகள்: | 11°00′27″N 79°35′20″E / 11.0076°N 79.5888°E |
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | நாகப்பட்டினம் |
| அமைவிடம்: | கொத்தங்குடி |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | கோடீசுவரர் |
| தாயார்: | பிருகந்நாயகி |
| சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
| கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
கொத்தங்குடி கோடீசுவரர் கோயில் அல்லது கொத்தங்குடி அரும்பாக்கம் ஸ்ரீ சிவன் கோவில், மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், கொத்தங்குடியில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]
அமைவிடம்
[தொகு]கும்பகோணம்-காரைக்கால் சாலையில் மாந்தைபிள்ளையார் கோயில் அடுத்து, அங்கிருந்து பிரிகின்ற கோமல் சாலையில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
இறைவன்,இறைவி
[தொகு]இக்கோயிலில் உள்ள இறைவன் கோடீசுவரர் ஆவார். இறைவி பிருகந்நாயகி ஆவார்.[1]
பிற சன்னதிகள்
[தொகு]கோயிலின் வாயிலை அடுத்து இடது புறம் வரசித்தி விநாயகர், பாலசுப்பிரமணியர் உள்ளனர். நவக்கிரக சன்னதி மற்றும் இறைவி சன்னதிகள் உள்ளன.[1]