குண்டையூர் சுந்தரேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குண்டையூர் சுந்தரேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

இக்கோயில் திருக்குவளைக்கு வடக்கே 1 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [2]

இறைவன், இறைவி[தொகு]

இங்குள்ள மூலவர் சுந்தரேசுவரர் என்றழைக்கப்படுகிறார். இறைவி மீனாட்சியம்மை. [2]

வரலாறு[தொகு]

சுந்தரரின் திருமாளிகைக்கு நெல் போன்றவற்றை அனுப்பி தொண்டுசெய்த குண்டையூர்க்கிழார் இங்கு வாழ்ந்தார். ஒரு முறை வானம் பொய்த்து வறட்சி ஏற்பட்டபோது குண்டையூர்க்கிழார் சுந்தரருக்கு நெல் அனுப்ப இயலாமல் தவித்தபோது இறைவன் நெற்குவியல் அருளியதாகக் கூறுவர். அதனை எடுத்துச்செல்ல இறைவன் பூதகணங்களையும் அனுப்பிவைத்துள்ளார். இங்கு மாசிமகத்தில் நெல் அட்டிச்செல்லும் விழா எனப்படும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. 2.0 2.1 2.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014