கீழையூர் செம்மலைநாதர் கோயில்
தோற்றம்
| செம்மலைநாதர் | |
|---|---|
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | நாகப்பட்டினம் |
| அமைவிடம்: | கீழையூர் |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | செம்மலைநாதர் |
| தாயார்: | வண்டமரும் பூங்குழலாள் |
| சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
| கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
கீழையூர் செம்மலைநாதர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
[தொகு]நாகப்பட்டினம்-வேதாரண்யம்/திருத்துறைப்பூண்டி சாலையில், வலப்புறமாக திருத்துறைப்பூண்டி சாலையில் கருங்கண்ணியை அடுத்து கீழையூர் உள்ளது.
இறைவன்,இறைவி
[தொகு]இக்கோயிலில் உள்ள இறைவன் செம்மலைநாதர் ஆவார். இறைவி வண்டமரும் பூங்குழலாள் ஆவார். [1]
பிற சன்னதிகள்
[தொகு]திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், இறைவி சன்னதிகள் உள்ளன. [1]