தெள்ளாறு திருமூலட்டானேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெள்ளாறு திருமூலட்டானேசுவரர் கோயில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

வந்தவாசி-திண்டிவனம் சாலையில் உள்ள தெள்ளாறு என்னுமிடத்தில் இக்கோயில் உள்ளது. [1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் திருமூலட்டானேசுவரர் ஆவார். இறைவி அகிலாண்டேசுவரி ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

திருச்சுற்றில் நால்வர், வலம்புரி விநாயகர், சண்முகர், நவக்கிரகங்கள், பைரவர், சனீஸ்வரர், சூரியன் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009