அரிச்சந்திரபுரம் சந்திரமௌலீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயில்

அரிச்சந்திரபுரம் சந்திரமௌலீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் அருகே அமைந்துள்ளது. இக்கோயில் தேவார வைப்புத்தலமாகும். அப்பர் பாடிய பெருமையுடையது.

அமைவிடம்[தொகு]

பட்டீஸ்வரம் அருகே இக்கோயில் உள்ளது. இத்தலம் சோழன்மாளிகை என்ற ஊருக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.

இறைவன்,இறைவி[தொகு]

மூலவர் விமானம்

கருவறையில் உள்ள மூலவர் சந்திரமௌலீஸ்வரர் ஆவார். இறைவி சௌந்தரவல்லி ஆவார்.[1] சிறியதாக அமைந்துள்ள இக்கோயில் மூலவர் சன்னதி, இறைவி சன்னதி மற்றும் அந்தந்த சன்னதிக்குரிய விமானங்களைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். இக்கோயிலில் சூரீயன், சந்திரன், பைரவர் உள்ளனர். திருசசுற்றில் மூலவர் சன்னதிக்குப் பின்புறமாக விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். இக்கோயில் வளாகத்தின் இடது புறம் மகாகாளி சன்னதி தனிக்கோயிலாக அமைந்துள்ளது.

குடமுழுக்கு[தொகு]

ரௌத்திர ஆண்டு ஆனி மாதம் வியாழக்கிமை 26 சூன் 1980இல் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டு உள்ளது. அண்மையில் ஏவிளம்பி ஆண்டு கார்த்திகை மாதம் 24 நவம்பர் 2017இல் குடமுழுக்கு நடைபெற்றது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. ஸ்ரீசௌந்தரவல்லி சமேத ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் கோயில் குடமுழுக்கு, தினமணி, 24 நவம்பர் 2017

மேலும் பார்க்க[தொகு]