திருப்பாற்கடல் கரபுரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருப்பாற்கடல் கரபுரீசுவரர் கோயில் வேலூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

காஞ்சீபுரம்-வேலூர் சாலையில் காவேரிப்பாக்கத்தை அடுத்து திருப்பாற்கடல் அமைந்துள்ளது. இவ்வூர் கரபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இறைவன்[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் கரபுரீசுவரர் ஆவார். இறைவி அபீதகுஜாம்பாள் ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

நேரே வாயில் வழியாக சென்று மூலவரை தரிக்கலாம். [1] கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம், தென்கிழக்கில் மடப்பள்ளியும், வடகிழக்கில் நவகிரக சன்னதி ஆகியவை உள்ளன. அடுத்து, யாகசாலையும், வில்வ மரமும் உள்ளன. திருச்சுற்றில் சங்கடஹர கணபதி, வள்ளிதெய்வானையுடனான ஷண்முகர் ஆகியோர் உள்ளனர். மேற்கு கோஷ்டத்தில் மகாவிஷ்ணு அமர்ந்த நிலையில் பிரயோக சக்கரம் ஏந்தியபடி உள்ளார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. ஆபத்தில் காப்பாக விளங்கும் கரபுரீஸ்வரர், தினகரன், 5 அக்டோபர் 2018