அகத்தீச்சுரம் அகத்தீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அகத்தீச்சுரம் அகத்தீசுவரர் கோயில் கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரியிலிருந்து 5 கிமீ தொலைவிலும், நாகர்கோயிலிருந்து 15 கிமீ தொலைவிலும் இக்கோயில் தேவார வைப்புத்தலமாகும். அப்பர் பாடிய பெருமையுடையது. [1]

அமைவிடம்[தொகு]

நாகர்கோயில் கன்னியாகுமரி சாலையில் உள்ள கொட்டாரம் என்னுமிடத்திலிருந்து 1 கிமீ தொலைவில் அமைந்துள்ள வடுகன்பற்று என்னுமிடத்திற்கு அருகில் உள்ளது.

இறைவன்,இறைவி[தொகு]

கருவறையில் உள்ள மூலவர் அகத்தீசுவரர் ஆவார். இறைவி அறம் வளர்த்த நாயகி, அமுதவல்லி ஆவார்.[2] இத்தலம் அகத்தியர், தன்னுடைய மனைவி லோபா முத்திரையுடன் வழிபட்ட சிறப்பினையுடையது.

குடமுழுக்கு[தொகு]

21 மார்ச் 1996இல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

மற்றொரு தலம்[தொகு]

இதே பெயரில் மற்றொரு கோயில் திண்டிவனம் பாண்டிச்சேரி சாலையில் உள்ள கிளியனூரில் அகத்தீசுவரம் என்ற பெயரில் உள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. அகத்தீஸ்வரர் திருக்கோவில், அகத்தீச்சரம், தேவார வைப்புத்தலங்கள்
  2. 2.0 2.1 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009