உள்ளடக்கத்துக்குச் செல்

தென்கோடி ருத்ரகோடீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்கோடி ருத்ரகோடீசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

[தொகு]

திருத்துறைப்பூண்டியிலிருந்து மருதூர் இரட்டைக்கடியடி வழியாக பஞ்சநதிக்குளம் கிழக்கு பகுதிக்கு அருகே கோயில் உள்ளது.

இறைவன்,இறைவி

[தொகு]

இங்குள்ள இறைவன் ருத்ரகோடீசுவரர் ஆவார். இறைவி திரிபுரசுந்தரி ஆவார். [1]

பிற சன்னதிகள்

[தொகு]

திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சூரியன், நாத லிங்கம், சந்திரன், சனி பகவான் சன்னதிகள் உள்ளன. மூலவர் சன்னதியின் வலது புறம் இறைவியின் சன்னதி உள்ளது. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009