வளர்புரம் நாகேசுவரர் கோயில்
தோற்றம்
வளர்புரம் நாகேசுவரர் கோயில் வேலூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]
அமைவிடம்
[தொகு]அரக்கோணம்-திருத்தணி சாலையில் தணிகைப்போளூர் என்னுமிடத்தில் வலப்புறத்தில், ரயில்வே லைனை அடுத்து இடப்புறம் செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இறைவன்
[தொகு]இக்கோயிலில் உள்ள இறைவன் நாகேசுவரர் ஆவார். இறைவி சொர்ணவல்லி ஆவார்.[1]
பிற சன்னதிகள்
[தொகு]நவக்கிரகம், சேக்கிழார் நால்வர், விநாயகர், விசுவநாத லிங்கம், சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.[1]