உள்ளடக்கத்துக்குச் செல்

பரஞ்சேர்வழி மத்யபுரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்யபுரீசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர்
அமைவிடம்:பரஞ்சேர்வழி
சட்டமன்றத் தொகுதி:காங்கயம் சட்டமன்றத் தொகுதி
மக்களவைத் தொகுதி:ஈரோடு மக்களவைத் தொகுதி
கோயில் தகவல்
மூலவர்:மத்யபுரீசுவரர்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

பரஞ்சேர்வழி மத்யபுரீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திலிருந்து சென்னிமலை சாலையில் 8 கி.மீ. தொலைவில் நால்ரோடு பகுதியின் வலப்புறத்தில் நத்தக்காடையூர் 10 கி.மீ. என்ற வழிகாட்டியுள்ள திசையில் 3 கி.மீ. தொலைவில் பரஞ்சேர்வழியில் அமைந்துள்ளது. 2024-ஆம் ஆண்டிலிருந்து கோயில் புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றது.

இறைவன்,இறைவி

[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் மத்யுபுரீசுவரர் என்றும் நட்டூர்நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி சுகந்த குந்தளாம்பிகை என்றும், நட்டுவார் குழலியம்மை என்றும் அழைக்கப்படுகிறார்.[1]

திருச்சுற்று

[தொகு]

திருச்சுற்றில் கணபதி, பைரவர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009