திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):புன்னை வனம், திருப்புனவாசல், திருப்புனவாயில்
பெயர்:திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருப்புனவாசல்
மாவட்டம்:புதுக்கோட்டை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:விருத்தபுரீஸ்வரர் (பழம்பதிநாதர்)
உற்சவர்:பழம்பதிநாதர்
தாயார்:பெரியநாயகி
தல விருட்சம்:புன்னை, சதுரக்கள்ளி, மகிழம், குருந்த மரம்
தீர்த்தம்:லட்சுமி, பிரம தீர்த்தம்
ஆகமம்:சிவாகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் புதுக்கோட்டை மாவட்டத்தில், திருப்புனவாசல் கிராமத்தில் அமைந்துள்ளது[1][2]. இத்தலத்தில் வேதங்கள் வழிபட்டன என்பது தொன்நம்பிக்கை. கோயிலினுள் பதினான்கு சிவலிங்கங்கள் உள்ளன. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [3]

திருப்புனவாயில் கோயில்

பிரம்மா வழிபட்ட தலம்[தொகு]

பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாமல் சிறை பட்ட பிரம்மா சிவனால் விடுவிக்கப்பட்டார்.தவறு செய்த பிரம்மா மீண்டும் படைக்கும் தொழிலைப் பெற முடிவு செய்து இத்தலத்தில் சிவலிங்கம் ஒன்றை நிறுவி,சிவலிங்கத்தின் நான்கு பக்கமும் சிவமுகத்தை உருவாக்கி,சிவலிங்க அபிசேகத்திற்கு தீர்த்தம் ஒன்றை உருவாக்கி வழிபட்டார் என்பது நம்பிக்கை.

விருத்தபுரீசுவரர்[தொகு]

விருத்தம் என்றால் பழமை என்று பொருள், மேலும் இந்த ஈசன் பழம்பதிநாதர்என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். இரண்டாம் சுந்தரபாண்டியன் பாண்டிய நாட்டுக் கட்டிடக் கலையையும், சோழநாட்டுக் கட்டிடக் கலையையும் இணைத்து இராசகோபுரமும், விமானமும் மிக உயரமாகக் கட்டப்பட்டது. கருவறையில் (தஞ்சை பிரகதீசுவரர் சிவலிங்கம் பெரியது, இதை விட கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சிவலிங்கம் உயரத்தில் மிகவும் பெரியது)உள்ள சிவலிங்கம் சுற்றளவில் மிகப்பெரியது.(சுற்றளவு 82.5அடி)

தல விருட்சம்[தொகு]

இந்த கோவிலில் நான்கு தல விருட்சங்கள் உள்ளது,ஒவ்வொரு யுகத்திற்கும் ஒன்று என்ற அடிப்படையில்,கிருதா யுகத்தில் வஜ்ரவனம் என்ற பெயரில் சதுரக்கள்ளியும்,திரேதாயுகத்தில் பிரமம்புரம் என்ற பெயரில் குருந்தமரமும், துவாபரயுகத்தில் விருத்தகாசி என்ற பெயரில் மகிழமரமும்,கலியுகத்தில் பழம்பதி என்ற பெயரில் புன்னை மரமும் தல விருட்சமாக இருந்ததால், இந்த நான்கும் நான்கு வேதங்களாக பாவித்து வணங்கப்படுகிறது. [4]

பெயர் காரணம்[தொகு]

இக்கோவிலுக்கு தெற்கே பாம்பாறும்,கோவிலுக்கு எதிரே மூன்று கிலோமீட்டர் தொலைவில் கடலும் உள்ளது.கடல் மற்றும் ஆற்றுப்புனலில் (வாசலில்) ஊர் அமைந்ததால் திருப்புனவாசல் எனப் பெயர் பெற்றது.[2].

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

படத்தொகுப்பு[தொகு]