திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருவாடானை ஆதிரத்தினேசுவரர் திருக்கோயில்
[[படிமம்:
Thiruvadanai Raja Gopuram, built by Nattukottai Nagarathar
|frameless|alt=]]
பெயர்
புராண பெயர்(கள்):திருஆடானை
பெயர்:திருவாடானை ஆதிரத்தினேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவாடானை
மாவட்டம்:ராமநாதபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆதிரத்தினேசுவரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர்
தாயார்:சினேகவல்லி, அம்பாயி அம்மை
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:சூரிய புஷ்கரிணி
சிறப்பு திருவிழாக்கள்:வைகாசி விசாகத்தில் வசந்த விழா 10 நாள், ஆடிப்பூரத்திருவிழா 15 நாள், நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி.
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
வரலாறு
அமைத்தவர்:மீள் கட்டுமானம் - நாட்டுக்கோட்டை நகரத்தார்

திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் தமிழ்நாடு மாநிலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை ஊரில் அமைந்துள்ளது. [1] இவ்வூரினை திருஆடானை என்றும் அறிவர்.

இறைவன், இறைவி[தொகு]

இங்குள்ள இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் இறைவி சினேகவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர்.[1] இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக சூரிய புஷ்கரிணியும் உள்ளன.

நம்பிக்கை[தொகு]

திருவாடானை பெயர்க்காரணத்தை விளக்கும் படம்

இத்தலத்தில் வருணன் மகன் வாருணி துருவாச முனிவரின் சாபத்தினால் ஆனை உடலும் ஆட்டுத்தலையுமாய் இருந்து வழிபட்டு விமோசனம் பெற்றான் என்பது தொன்நம்பிக்கை.

விழாக்கள்[தொகு]

இக்கோயிலில் வைகாசி விசாகத்தில் வசந்த விழா, ஆடிப்பூரத் திருவிழா, நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி உள்ளிட்ட பலவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.[1]

திருப்பணிகள்[தொகு]

இக்கோயில் ஆதியில் [[பாண்டியர்| பாண்டியர்களால் கட்டப்பட்டுள்ளது. பின்னர் நாயக்கர் கோயிலை விரிவுபடுத்தியுள்ளனர். தற்போது உள்ள கோயில் 19ஆம் நூற்றாண்டில் சேதுபதி மன்னர் தலைமையில் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் கட்டப்பெற்றது[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 அருள்மிகு ஆதிரத்தினேரீஸ்வரர் கோயில், தினமலர் கோயில்கள்
  2. பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் (1953). நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு. பக். 245,246. 

வெளி இணைப்புக்கள்[தொகு]