உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலங்குடி நாமபுரீசுவரர் கோயில்

ஆள்கூறுகள்: 10°21′24″N 78°58′39″E / 10.3568°N 78.9775°E / 10.3568; 78.9775
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலங்குடி நாமபுரீசுவரர் கோயில்
ஆலங்குடி நாமபுரீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
ஆலங்குடி நாமபுரீசுவரர் கோயில்
ஆலங்குடி நாமபுரீசுவரர் கோயில்
ஆள்கூறுகள்:10°21′24″N 78°58′39″E / 10.3568°N 78.9775°E / 10.3568; 78.9775
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவிடம்:ஆலங்குடி
சட்டமன்றத் தொகுதி:ஆலங்குடி
மக்களவைத் தொகுதி:சிவகங்கை
ஏற்றம்:118 m (387 அடி)
கோயில் தகவல்
மூலவர்:நாமபுரீசுவரர்
தாயார்:அறம் வளர்த்த நாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி,
புதன் பிரதோசம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

ஆலங்குடி நாமபுரீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.

அமைவிடம்

[தொகு]

இக்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடந்தபோது தேவர்கள் விஷத்தை சிவனுக்கு வழங்கினர். உலக மக்கள் உய்வதற்காக இறைவன் அந்த ஆலகால விஷத்தைக் குடித்தார். அதனால் இவ்வூர் ஆலங்குடி எனப்படுகிறது. [1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 118 மீட்டர் உயரத்தில், 10°21′24″N 78°58′39″E / 10.3568°N 78.9775°E / 10.3568; 78.9775 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, ஆலங்குடி நாமபுரீசுவரர் கோயில் அமையப் பெற்றுள்ளது.[1]

இறைவன், இறைவி

[தொகு]

இக்கோயிலின் மூலவராக நாமபுரீசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி அறம்வளர்த்த நாயகி ஆவார். மூலவர் எதிரில் இருக்கும் நந்தி நாமத்துடன் காணப்படுவது இக்கோயிலின் சிறப்பாகும். அதனால் மூலவரை நாமபுரீசுவரர் என்று கூறுகின்றனர். விஷ்ணு நந்தி வடிவில் சிவனை வழிபட்டதாகக் கூறுவர். [1]

அமைப்பு

[தொகு]

கோயிலில் சூரியன், கால பைரவர், பால சனீசுவரர், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, ஆதி மாணிக்கவாசகர், மகாலட்சுமி, ஆஞ்சநேயர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. தட்சிணாமூர்த்தி ரிஷபத்தோடும், நான்கு ரிஷிகளுக்குப் பதிலாக இரண்டு ரிஷிகளோடும் காலடியில் முயலகனோடு காணப்படுகிறார். இவர் மேதா தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். பொதுவாக சிவன் கோயில்களில் சூரியனையும், சந்திரனையும் காணலாம். ஆனால் இக்கோயிலில் சூரியன் மட்டுமே காணப்படுகிறார். அவரது வலது புறம் கால பைரவரும், இடது புறம் அவருடைய மகன் சனீசுவரரும் உள்ளனர். இவர் பால சனீசுவரராக உள்ளார். மார்கழி 25 முதல் தை 10ஆம் நாள் வரை சூரிய வெளிச்சம் மூலவரின் மேல் விழுகிறது. [1]

திருவிழாக்கள்

[தொகு]

புதன் பிரதோஷம், சனி பிரதோஷம், சிவராத்திரி போன்ற விழாக்கள் இக்கோயிலின் விழாக்களாகும். சிவன் கோயில்களில் சனி பிரதோஷம் சிறப்பாகக் கொண்டாடப்படும். இக்கோயிலில் புதன் பிரதோஷம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]