உள்ளடக்கத்துக்குச் செல்

வேந்தன்பட்டி நெய் நந்தீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பொன்னமராவதி வட்டத்தில் வேந்தன்பட்டி என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

[தொகு]

தனிப்பெரும் சிறப்புகளை கொண்ட ஐந்து நிலை நாட்டின் ஒர் அங்கமான வேந்தன்பட்டி கிராம நகரத்தார்கள் போற்றும் இக்கோவில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில் வேந்தன்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி

[தொகு]

இக்கோயிலின் மூலவராக சொக்கலிங்கேசுவரர் உள்ளார். இறைவி மீனாட்சி அம்மன் அம்மாள் ஆவார். கோயிலின் மரம் வன்னி ஆகும். [1]

அமைப்பு

[தொகு]

கோயிலின் எதிரே நந்தி தீர்த்தம் உள்ளது. மூலவரின் இடப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி, சூரியன், பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோர் உள்ளனர். வேந்தன்பட்டியில் கச்சேரிக்கூடம் என்னுமிடத்தில் வேப்ப மரம் ஒன்று இருந்தது. அவ்விடத்தில் நெய் நந்தீசுவரர் சுயம்புவாகத் தோன்றியதாகக் கூறுவர். இக்கோயிலில் உள்ள நந்தி நெய்யினால் அபிஷேகம் செய்யும்போது எந்த நெய்யும் கீழே விழாமல் ஈர்த்து விடும் சக்தி உள்ளது. அவ்விடத்தருகே ஈக்களோ, எறும்புகளோ வருவதில்லை. நந்தீசுவரரின் மீது பூசப்பட்ட நெய்யின்மீது ஈக்களோ, எறும்புகளோ அமர்வதுமில்லை. அவ்வாறே இக்கோயிலில் உள்ள நெய்க்கிணற்றில் ஈக்கள் மொய்ப்பதில்லை. இங்குள்ள நந்தியின் கொம்புகளுக்கு நடுவில் இயற்கையாகவே ஒரு சக்கரம் அமைந்துள்ளது. தஞ்சாவூர் நந்தியின் தம்பி என்ற நிலையில் வைத்து, இந்த நந்தியைத் தம்பி நந்தி என்றழைக்கின்றனர். [1] இதுவரை இக்கோயிலில் எட்டு முறை குடமுழுக்கு நடைபெற்றதாகக் கூறுகின்றனர். [2]

திருவிழாக்கள்

[தொகு]

மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், ஐப்பசி அன்னாபிஷேகம், சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், நவராத்திரி, கார்த்திகை, சோம வாரம், தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. [1]

மேற்கோள்கள்

[தொகு]