மணமேல்குடி ஜெகதீஸ்வரர் கோயில்
ஜெகதீசுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
வேறு பெயர்(கள்): | |
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | புதுக்கோட்டை |
அமைவிடம்: | மணமேல்குடி |
கோயில் தகவல் | |
மூலவர்: | ஜெகதீசுவரர் |
தாயார்: | ஜெகத்ரட்சகி |
குளம்: | |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
கல்வெட்டுகள்: |
ஜெகதீஸ்வரர் கோயில் புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம் மணமேற்குடி எனப்படும் மணமேல்குடியில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
அமைவிடம்
[தொகு]அறந்தாங்கியிலிருந்து 30 கி.மீ. தொலைவில், கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. பட்டுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.[2]
இறைவன், இறைவி
[தொகு]இங்குள்ள இறைவன் ஜெகதீஸ்வரர், இறைவி ஜெகத்ரட்சகி ஆவார். கோயிலில் மகிழம்பூ மரம், அரச மரம், வில்வ மரம் ஆகிய மரங்கள் உள்ளன. சிவனுக்கு பிரதோஷ விழா சிறப்பாக இங்கு நடைபெறுகிறது. இங்கு வழிபடும்போது திருமணத்தடை நீங்கும் என்றும், குழந்தை வரம் கிட்டும் என்றும் கூறுகின்றனர்.[3] இங்கு குலச்சிறை நாயனார், திருஞானசம்பந்தர், நின்றசீர் நெடுமாறர், மங்கையர்க்கரசியார் ஆகியோர் தனிச் சன்னதிகளில் கொடிக் கம்பத்திற்கு அருகில் உள்ளனர்.[4]
சிறப்பு
[தொகு]63 நாயன்மார்களில் ஒருவரான குலச்சிறை நாயனாரால் பூசிக்கப்பெற்ற வகையில் இத்தலம் பெருமை பெற்றதாகும்.[2]
திறந்திருக்கும் நேரம்
[தொகு]காலசந்தி (காலை 9.00 மணி), உச்சிக்காலம் (நடுப்பகல் 12.00 மணி), சாயரட்சை (மாலை 6.00 மணி), அர்த்தசாமம் (இரவு 8.00 மணி) என்ற வகையில் நான்கு கால பூசைகள் இங்கு நடத்தப்பெறுகின்றன.இக்கோயில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 8.30 வரையிலும் திறந்திருக்கும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ புதுக்கோட்டை சிவன் கோயில், அருள்மிகு ஜெகதீஸ்வரர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
- ↑ 2.0 2.1 2.2 புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, சென்னை, 2003
- ↑ திருமணத்தடை நீக்கும் மணமேல்குடி அம்மன், ஆன்மிகம்
- ↑ மணமேல்குடி- குலச்சிறை நாயனாரின் அவதாரத் தலம்