திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோயில்
திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 10°25′56″N 79°07′09″E / 10.4322°N 79.1192°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருமணஞ்சேரி |
பெயர்: | திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருமணஞ்சேரி |
மாவட்டம்: | புதுக்கோட்டை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சுகந்த பரிமளேஸ்வரர் |
தாயார்: | பெரிய நாயகி |
வரலாறு | |
வலைதளம்: | http://www.thirumanancheritemple.tinfo.in/index_english.html |
திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]
அமைவிடம்
[தொகு]புதுக்கோட்டையிலிருந்து 45 கி.மீ. தொலைவில் புதுக்கோட்டை-கறம்பக்குடி சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது.[2]
இறைவன், இறைவி
[தொகு]இக்கோயிலில் உள்ள இறைவன் சுகந்த பரிமளேஸ்வரர், இறைவி பெரிய நாயகி. [2] இறைவனை திருமணநாதர் என்றும் அழைப்பர். காளமேகப்புலவர் இத்தல இறைவனை தரிசிக்க அக்னியாற்றைக் கடந்து வரும்போது கடும் வெயிலில் நடந்துவந்தார். கால் சூடு தாங்க முடியாமல் இறைவனை நோக்கிப் பாடியபோது இறையருளால் ஆற்றில் தண்ணீர் வந்தது. ஆற்றில் பின்னர் எளிதாக நடந்தார்.[3]
சிறப்பு
[தொகு]இக்கோயிலில் சிவன் சுயம்புலிங்கம். தீராத வியாதிகளை இக்கோயில் இறைவன் தீர்த்துவைப்பான் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. [2] பொதுவாக சிவன் கோயில்களில் நந்தியை கொடி மரத்தின் அருகில் காணலாம். ஆனால் இக்கோயிலில் ராஜகோபுரத்திற்கு முன்பாகக் காணப்படுகிறார். நந்திக்கு தனி மண்டபம் இல்லை. தரையில் அமர்ந்துள்ளார். [4] இக்கோயிலுக்குத் தல மரம் எதுவுமில்லை. [3]
திறந்திருக்கும் நேரம்
[தொகு]காலசந்தி (காலை 8.00 மணி), உச்சிக்காலம் (நடுப்பகல் 12.00 மணி), சாயரட்சை (மாலை 6.00 மணி), அர்த்தசாமம் (இரவு 8.00 மணி) என்ற வகையில் நான்கு கால பூசைகள் இங்கு நடத்தப்பெறுகின்றன.இக்கோயில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 முதல் 8.30 வரையிலும் திறந்திருக்கும். சித்திரை மாதம் தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம் 10 நாள்கள், ஆடி மாதம் ஆடி 18, தைப்பூசம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி ஆகிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பெறுகின்றன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சுகந்த பரிமேளேஸ்வரர் கோயில், திருமணஞ்சேரி, புதுக்கோட்டை மாவ்ட்டம்
- ↑ 2.0 2.1 2.2 2.3 புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, சென்னை, 2003
- ↑ 3.0 3.1 அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
- ↑ அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில், வலைத்தமிழ்