மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில்
| வாகீசுவரமுடையார் கோயில் | |
|---|---|
| பெயர் | |
| வேறு பெயர்(கள்): | |
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | புதுக்கோட்டை |
| அமைவிடம்: | மலையடிப்பட்டி |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | வாகீசுவரமுடையார் |
| குளம்: | |
| சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
| கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
| கல்வெட்டுகள்: | |
மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில் என்பது புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள மலையடிப்பட்டி என்ற ஊரிலுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இது ஒரு குடைவரைக்கோயில். இவை பாண்டியர் மற்றும் முத்தரையர் குடைவரைகள்.[1]
அமைவிடம்
[தொகு]மலையடிப்பட்டி என்ற இடத்தில் இரு குகைக்கோயில்கள் உள்ளன. ஒன்று சிவனுக்கும் மற்றொன்று திருமாலுக்கும் உரியது.[2] சிவனுக்குரிய இக்கோயில் வாகீஸ்வரமுடையார் கோயில் எனப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் (தேசிய நெடுஞ்சாலை 67) , துவாக்குடியிலிருந்து அசூர், செங்களூர் வழியாக கிள்ளுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் 16கி.மீ. தூரத்திலும், புதுக்கோட்டையிலிருந்து சுமார் 33 கி.மீ. தூரத்தில் கிள்ளுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் இக்கோயில் உள்ளது.[3]
இறைவன், இறைவி
[தொகு]இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் வாகீஸ்வரமுடையார், இறைவி பெரியநாயகி.
சிறப்பு
[தொகு]ஒரே குன்றில் குடைந்து எடுக்கப்பட்ட திருமால் மற்றும் சிவன் கோயில்களில் இந்த சிவன் கோயிலில் நந்திவர்ம பல்லவன் (கி.பி.775-826) காலத்துக் கல்வெட்டு காணப்படுகிறது. சுமார் கி.பி.730இல் குவாவன் சாத்தன் என்னும் விடேல் விடுகு முத்தரையர் இம்மலையைக் குடைந்து எடுத்து கோயில் அமைத்தான் என்பதை கல்வெட்டின் மூலம் அறியலாம். இக்கோயில் ஒரு குடவரைக்கோயிலாகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மலையடிப்பட்டி
- ↑ Dr.J.Raja Mohamad, Art of Pudukottai (Art and Architecture), Historical Arcives Committee,Pudukottai, 2003
- ↑ 3.0 3.1 புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, சென்னை, 2003
வெளி இணைப்புகள்
[தொகு]- அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், தினமலர்-கோயில்கள்
- மலையடிப்பட்டி குடவரை கோயில் பரணிடப்பட்டது 2014-09-03 at the வந்தவழி இயந்திரம்
- http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=658
- http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=272
- விக்கிமேப்பியாவில் மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில் அமைவிடம்