பேரையூர் நாகநாதசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் பேரையூர் என்னும் கிராமத்தில் நாகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் புதுக்கோட்டையில் இருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் தமிழகத்தில் உள்ள நாகர் கோயில்களில் குறிப்பிடத்தக்க கோயிலாகும்.[1]

இறைவன், இறைவி[தொகு]

இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் நாகநாதசுவாமி, இறைவி பிரகதாம்பாள்.

நாகராஜா வழிபாடு[தொகு]

கோயில் வளாகத்தில் பக்தர்களால் காணிக்கையாக தரப்பட்ட 6 அங்குலம் முதல் 2 அடி வரையிலான கருங்கல்லால் ஆன நாகங்களைக் காணலாம். அவ்வாறு வழங்கப்பட்ட காணிக்கைகளில் பலவற்றை கோயில்களின் சுற்றுச்சுவர்களில் அமைத்துள்ளனர். இயற்கை வழிபாட்டின் ஆரம்ப கால நிலையில் நாக வழிபாடும் அமையும். இக்கோயிலில் 1865, 1977 மற்றும் 1989இல் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. [2]

கல்வெட்டு[தொகு]

இக்கோயிலில் இராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த (கி.பி.1012-1044) கல்வெட்டுக்கள் உள்ளன. பிற சோழ மன்னர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டைத் தொண்டைமான்கள் உள்ளிட்ட பலருடைய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. [2]

மற்றொரு கோயில்[தொகு]

இவ்வூரிலுள்ள மற்றொரு சிவன் கோயில் தேவார வைப்புத்தலமான தேவநாதசுவாமி கோயில் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Naganathar Temple" (ta-US).
  2. 2.0 2.1 V.Ganapathy, Temple with special significance, The Hindu, 3.3.2000

உசாத்துணை[தொகு]