மலையடிப்பட்டி பள்ளிகொண்டபெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மலையடிப்பட்டி பள்ளிகொண்டபெருமாள் கோயில்

மலையடிப்பட்டி பள்ளிகொண்டபெருமாள் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள வைணவத் திருக்கோயில்.

அமைவிடம்[தொகு]

மலையடிப்பட்டி என்ற இடத்தில் இரு குகைக்கோயில்கள் உள்ளன. ஒன்று சிவனுக்கும் மற்றொன்று திருமாலுக்கும் உரியது. [1] திருமாலுக்குரிய கோயில் கண்திறந்த பெருமாள் கோயில் எனப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் (தேசிய நெடுஞ்சாலை 67) , துவாக்குடியிலிருந்து அசூர், செங்களூர் வழியாக கிள்ளுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் 16கிமீ தூரத்திலும், புதுக்கோட்டையிலிருந்து சுமார் 33 கிமீ தூரத்தில் கிள்ளுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் பள்ளிகொண்ட பெருமாள் கோயில் உள்ளது. [2]

இறைவன், இறைவி[தொகு]

சயன நிலையில் உள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்டபெருமாள், தாயார் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி.

சிறப்பு[தொகு]

சிவன் குகைக்கு மேற்குப் பகுதியில் விஷ்ணு குகை உள்ளது. [2] இக்கோயில் ஒரு குடவரைக்கோயிலாகும். மலையைக் குடைந்து சுவரிலேயே பள்ளிகொண்ட பெருமாள் ஆதிசேஷ சயனப்படுக்கையில் இருப்பதுபோல செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகள் மூலமாக கி.பி.7-8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. [2] சற்றொப்ப புதுக்கோட்டை அருகே உள்ள திருமயத்தில் இருப்பதைப் போலவே இங்குள்ள பெருமாள் காணப்படுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dr.J.Raja Mohamad, Art of Pudukottai (Art and Architecture), Historical Arcives Committee,Pudukottai, 2003
  2. 2.0 2.1 2.2 புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, சென்னை, 2003 பிழை காட்டு: Invalid <ref> tag; name "pudukottai" defined multiple times with different content

வெளி இணைப்புகள்[தொகு]