நேமம் ஜெயங்கொண்ட சோளீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேமம் ஜெயங்கொண்ட சோளீசுவரர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேமம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியை ஜெயங்கொண்ட சோழபுரம், ஜெயங்கொண்டபுரம், குலசேகரபுரம், மதுநந்திபுரம் என்று பல பெயர்களால் அழைக்கின்றனர். [1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக ஜெயங்கொண்ட சோளீசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி சௌந்தரநாயகி ஆவார். கோயிலின் முன்பாக கோயில் தீர்த்தமான சோழ தீர்த்தம் உள்ளது. [1]

அமைப்பு[தொகு]

கோயில் ஐந்து நிலை ராஜ கோபுரத்தைக் கொண்டு அமைந்துள்ளது. கோயில் மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. தல விநாயகர் ஆவுடையில் உள்ளார். இரு திருச்சுற்றுகளைக் கொண்ட இக்கோயிலில் பைரவர் மேற்கு நோக்கி உள்ளார். ஜெயங்கொண்ட விநாயகர், முருகன், விசுவநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சன்னதிகள் உள்ளன. அசுரர்களிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ள தேவர்கள் சிவனை வழிபட வந்தனர். அப்போது யோக நிலையில் இருந்த அவரை எழுப்புவதற்காக மன்மதனை வேண்ட, மன்மதன் சிவன்மீது மலர்க்கணை தொடுத்தார். சிவன் தன் கண்களைத் திறந்து அவரைச் சாம்பலாக்கினார். ஆதலால் மூலவர் ஜெயங்கொண்ட சோளீசுவரர் என்றழைக்கப்படுகிறார். [1]

திருவிழாக்கள்[தொகு]

பிரதோஷம், சிவராத்திரி போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. [1]

மேற்கோள்கள்[தொகு]