திருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயில்

திருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம் வட்டத்தில் திருக்கட்டளை ஊராட்சியில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

வரலாறு[தொகு]

திருக்கட்டளை என்ற சொல்லானது திருக்கற்றளி என்ற சொல்லிலிருந்து மருவிவந்ததாகும். கல் தளி என்றால் கற்றளி என்ற நிலையில் கற்கோயிலைக் குறிக்கிறது. அளவில் சிறிதாக அமைந்துள்ள இக்கோயில் பரிவார வகையைச் சார்ந்ததாகும். இக்கோயில் ஆதித்த சோழன் காலத்தைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் வகையில் கோயிலில் கல்வெட்டு காணப்படுகிறது. மற்றொரு கல்வெட்டு மிலட்டூர் போரில் போகேந்திர சிங்கபேரரையன் மரணமடைந்ததைப் பற்றியும் அவரது தம்பியைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. தம் பகைமை தீரும்பொருட்டு கோயிலில் விளக்கு எரிப்பதற்காக தேவைப்படுகின்ற நெய்யினை எடுக்க தானம் தந்ததைக் குறிப்பிடுகிறது. முதலாம் குலோத்துங்கனால் முகமண்டபம் கட்டப்பட்டுள்ளது. [1]

இறைவன், இறைவி[தொகு]

இங்குள்ள மூலவர் சுந்தரேசுவரர் என்றழைக்கப்படுகிறார். இறைவி மங்களநாயகி. [1] மூலவர் கருவறைக்கு முன்பாக சிறிய நந்தியும், பலி பீடமும் உள்ளன. மூலவர் சன்னதிக்கு முன்பாக அடுத்தடுத்து இரு பலி பீடங்களும் நந்தியும் உள்ளன.

அமைப்பு[தொகு]

சிறிய, அழகான கருவறையின் மீது விமானம் அமைந்துள்ளது. கருவறை சதுர வடிவில் காணப்படுகிறது. அர்த்த மண்டபம், முக மண்டபம் ஆகியவற்றோடு கோயில் உள்ளது. தட்சிணாமூர்த்தி, வீராடனமூர்த்தி, பிட்சாடனமூர்த்தி ஆகிய மூன்று மூர்த்திகளும் இக்கோயிலில் அமைந்துள்ளது அதன் சிறப்பை உணர்த்துகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

படத்தொகுப்பு[தொகு]