உள்ளடக்கத்துக்குச் செல்

ராமகிரி வாலீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராமகிரி வாலீசுவரர் கோயில் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள சித்தூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்திற்கு அடுத்து அமைந்துள்ள ராமகிரியில் இக்கோயில் அமைந்துள்ளது. காரியாற்றின் கரையில் உள்ளதால் இவ்வூர் காரிக்கரை என்றும் அழைக்கப்படுகிறது.

இறைவன்,இறைவி

[தொகு]

இங்குள்ள இறைவன் வாலீசுவரர் ஆவார். இறைவி மரகதாம்பாள் ஆவார்.[1]

பிற சன்னதிகள்

[தொகு]

ராஜ கோபுரமில்லாத இக்கோயிலின் முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது இடது புறத்தில் நந்தி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர் சன்னதி உள்ளது. இறைவி சன்னதி னியாக உள்ளது. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009