விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில்
பெயர்
பெயர்:விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில்
அமைவிடம்
ஊர்:விரிஞ்சிபுரம்
மாவட்டம்:வேலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மார்க்கபந்தீஸ்வரர்
தாயார்:மரகதாம்பிகை
தீர்த்தம்:சிம்ம தீர்த்தம்

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 1300 வருடங்கள் பழமையான சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

தமிழ்நாடு மாநிலம் வேலூர் மாவட்டத்தில் விரிஞ்சிபுரம் என்னும் ஊரில் இத் திருத்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள கோயில் 1300 வருடங்கள் பழமையானதாகும். இங்கு பிரதான தெய்வம் மார்க்கபந்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக வடகிழக்கு திசையில் சிறிது சாய்ந்த நிலையில் உள்ளது.

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் மார்க்கபந்தீஸ்வரர் ஆவார். இறைவி மரகதாம்பிகை ஆவார். [1] மூலவரான மார்க்கபந்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக வடகிழக்கு திசையில் சிறிது சாய்ந்த நிலையில் காணப்படுகிறார்.

தெய்வங்கள்[தொகு]

இக்கோயிலில் விநாயகர், முருகன்உடன் வள்ளி,தெய்வானை, தட்சணாமூர்த்தி , பைரவர் , விஷ்ணு துர்க்கை, சரஸ்வதி, பிரம்மா, 63 நாயன்மார்கள் ஆகியோரும் உள்ளனர்.

பூஜைகள்[தொகு]

தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும். பிரதோஷம் வழிபாடு, சிவராத்திரி , வைகாசி விசாகம், சித்ரா பெளர்ணமி, தை அமாவாசை போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

நம்பிக்கைகள்[தொகு]

கோயிலின் உட்பிரகாரத்தில் தலமரமாக பனைமரம் உள்ளது. இது ஒரு அதிசய பனை மரமாக உள்ளது. அதாவது இந்த பனைமரத்தில் காய்க்கும் பனை காய்கள் கருப்பாக காய்க்கின்றன. மறு வருடம் காய்க்கும் பனை காய்கள் வெள்ளையாக காய்க்கின்றன. [2] மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியக் கதிர்கள் விழுகின்றன.

நேரம் காட்டும் கல்[தொகு]

கோயிலின் உள்ளே தென்புறத்தில், "நேரம் காட்டும் கல்" இருக்கிறது. அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. திருவிரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில், மாலை மலர், 30 மே 2016

உசாத்துணை[தொகு]