பொன்மேனி
பொன்மேனி Ponmeni | |
---|---|
ஆள்கூறுகள்: 9°55′33″N 78°05′24″E / 9.9257°N 78.0901°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 184 m (604 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625016[1] |
தொலைபேசி குறியீடு | +91452xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, ஆரப்பாளையம், விளாங்குடி, கூடல் நகர், தத்தனேரி, கோச்சடை, எஸ். எஸ். காலனி, அரசரடி, காளவாசல் மற்றும் பழங்காநத்தம் |
மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | டாக்டர். எஸ். அனீஷ் சேகர், இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | மதுரை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | சு. வெங்கடேசன் |
சட்டமன்ற உறுப்பினர் | செல்லூர் கே. ராஜூ |
இணையதளம் | https://madurai.nic.in |
பொன்மேனி (ஆங்கில மொழி: Ponmeni) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3][4][5]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 184 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பொன்மேனி பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°55′33″N 78°05′24″E / 9.9257°N 78.0901°E ஆகும். மதுரை, ஆரப்பாளையம், விளாங்குடி, கூடல் நகர், தத்தனேரி, கோச்சடை, எஸ். எஸ். காலனி, அரசரடி, காளவாசல் மற்றும் பழங்காநத்தம் ஆகியவை பொன்மேனி பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
பொன்மேனி பகுதியில் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை ஒன்று செயல்படுகிறது.[6]
பொன்மேனி பகுதியில் காளியம்மன் கோயில்[7] மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற செல்லத்தம்மன் கோயில்[8] ஆகியவை அமையப் பெற்றுள்ளன.
பொன்மேனி பகுதியானது, மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[9] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் செல்லூர் கே. ராஜூ ஆவார்.[10] மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PONMENI Pin Code - 625016, Madurai North All Post Office Areas PIN Codes, Search MADURAI Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
- ↑ India Election Commission (1976). Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976 (in ஆங்கிலம்). Election Commission, India.
- ↑ "14 acres of Meenakshi temple land in Ponmeni appropriated". The Hindu (in Indian English). 2019-06-06. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
- ↑ "Madurai road caved in six times in 2 years". The Times of India. 2023-04-09. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
- ↑ "மதுரை, பொன்மேனி பகுதியில் ரவுடி கொடூரமாக வெட்டி கொலை, 6 பேர் மீது வழக்கு பதிவு – Police E-News" (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-12-15. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
- ↑ p Kumar (2023-04-10). "மதுரையில் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை திறப்பு விழா". ARASIYAL TODAY (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
- ↑ "Madurai ponmeni kaliamman temple kumbabishekam". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
- ↑ "Arulmigu Chellathamman Temple, Ponmeni - 625016, Madurai District [TM032540].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
- ↑ "மதுரை மாநகராட்சி பகுதியில் - வார்டு வாரியாக சட்டப்பேரவை தொகுதிகள் :". Hindu Tamil Thisai. 2021-03-18. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
- ↑ "Madurai West Assembly constituency" (in ஆங்கிலம்). 2023-04-30. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
- ↑ "Madurai Lok Sabha constituency" (in ஆங்கிலம்). 2023-06-27. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.