களக்காடு சத்தியவாகீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

களக்காடு சத்தியவாகீசுவரர் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குனேரி வட்டத்தில், வள்ளியூரிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள களக்காடு என்னுமிடத்தில் இக்கோயில் உள்ளது. [1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் சத்தியவாகீசுவரர் ஆவார். இறைவி கோமதியம்மாள் ஆவார். [1]

அமைப்பு[தொகு]

ஒன்பது நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் உள்ள இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்று திருச்சுற்றுகளைக் கொண்ட இக்கோயிலின் மணி மண்டபத்தில் அழகிய சிற்பங்களும், இசைத்தூண்களும் காணப்படுகின்றன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009