திருமேற்றளிகை கைலாசநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கைலாசநாதர் கோயில்

திருமேற்றளிகை கைலாசநாதர் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் அருகே அமைந்துள்ளது. வைப்புத்தலமான இத்தலம் சுந்தரர் பாடியதாகும். [1]

அமைவிடம்[தொகு]

பட்டீஸ்வரம் அருகே இக்கோயில் உள்ளது. இத்தலம் ஆறை மேற்றளி என்றும் திருமேற்றளி என்றும் திருமேற்றளிகை என்றும் அழைக்கப்படுகிறது. [1]

இறைவன்,இறைவி[தொகு]

கருவறையில் தாரா லிங்கமாக மூலவர் உள்ளார். இறைவன் கைலாசநாதர், இறைவி சபளநாயகி. [1]

கருவறை[தொகு]

கருவறை மண்டபத்தில் மூலவருக்கு முன்பாக சூரியன், சண்டிகேஸ்வரர், விநாயகர், பைரவர், சபளிநாயகி ஆகியோரது சிலைகள் உள்ளனர். சற்று உயர்ந்த தளத்தில் கருவறை, விமானம், முன்மண்டபத்துடன் சிறிய கோயிலாக உள்ளது. கோயிலுக்கு முன்பாக சிறிய மண்டபத்தில் நந்தியும் பலிபீடமும் காணப்படுகின்றன. கோயிலின் கோஷ்டத்தில் சிற்பங்கள் காணப்படுகின்றன. கோயிலுக்கு முன்பாக இடிபாடான நிலையில் கட்டட அமைப்பு காணப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் கோபுரமாக இது இருந்திருக்க வாய்ப்புள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

மேலும் பார்க்க[தொகு]

படத்தொகுப்பு[தொகு]