உள்ளடக்கத்துக்குச் செல்

தின்னக்கோணம் பசுபதீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு பசுபதீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
அமைவிடம்:முசிறி, தின்னக்கோணம், முசிறி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மண்ணச்சநல்லூர்
மக்களவைத் தொகுதி:பெரம்பலூர்
கோயில் தகவல்
மூலவர்:பசுபதீஸ்வரர்
தாயார்:கோவிந்தவள்ளிஅம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:சிவராத்திரி, நவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

தின்னக்கோணம் பசுபதீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், தின்னக்கோணம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[2]

வரலாறு

[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் பசுபதீஸ்வரர், கோவிந்தவள்ளிஅம்மன் சன்னதிகளும், விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை, அம்மன், பைரவர், நவகிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.