உள்ளடக்கத்துக்குச் செல்

தண்டாங்கோரை கைலாசநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுழைவாயில்

தண்டாங்கோரை கைலாசநாதர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

[தொகு]

தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் மானாங்கோரைக்கு அடுத்து தண்டாங்கோரை உள்ளது. இவ்வூர் முன்னர் தண்டங்குறை என்றழைக்கப்பட்டது.

இறைவன்,இறைவி

[தொகு]
மூலவர் விமானம்

இங்குள்ள இறைவன் கைலாசநாதர் ஆவார். இறைவி சர்வலோக நாயகி ஆவார். [1] கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை உள்ளனர். உள் மண்டபத்தில் பைரவர், நாகர், சூரியன் ஆகியோர் உள்ளனர்.

பிற சன்னதிகள்

[தொகு]

முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது திருச்சுற்றில் சித்தி விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. [1] கஜலட்சுமி சன்னதியும், சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளன.

குடமுழுக்கு

[தொகு]

நந்தன வருடம் ஆனி 24ஆம் நாள் (8 சூலை 2012) குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009