அண்ணாமலையார் வெண்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அண்ணாமலையார் வெண்பா என்னும் நூல் குரு நமசிவாயர் என்பவரால் பாடப்பட்டது. இந்தப் புலவர் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

குரு நமசிவாயரின் ஆசிரியர் ‘குகை நமசிவாயர்’. இவரது பெயரை இந்த நூல் 10 வெண்பாக்களில் வைத்துப் பாடிப் போற்றியுள்ளது.

இந்த நூலில் 100 வெண்பாக்களும், காப்பு வெண்பா ஒன்றும், நூற்பயன் கூறும் வெண்பா ஒன்றும் உள்ளது. ஒவ்வொரு வெண்பாவும் ‘அண்ணாமலை’ என்னும் முடிவினைக் கொண்டுள்ளது. நூற்பயன் கூறும் இதன் நூற்பா இந்த நூலின் பெயரை ‘அண்ணாமலை மாலை’ எனக் குறிப்பிடுகிறது.

திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் அருளையும் ஆற்றல்களையும் இந்த நூல் போற்றுகிறது. அவற்றுள் சில.

  • சிவபிரான் சிம்புநாய் நரசிங்கத்தை அடக்கினான்
  • சோமாசிமாறர் செய்த மகத்துக்கு சிவன் உமையோடு சென்றிருந்தார்
  • வாதவூராருக்காகக் கூடல்நகரில் மண் சுமந்தார்
  • சுந்தரர் பாடலுக்காகச் சுந்தரர் மனைவியிடம் இருமுறை தூதராக நடந்துசென்றார்.
  • சங்கம் இருந்து தமிழாராய்ந்தார்.

தில்லை, காசி, ஆரூர், மதுரை, நெல்லை ஆகிய கோயில்களைப் போற்றியுள்ளார்.

பலரும் போற்றும் இந்நூல் பாடல்
கண்டம் கரியமலை கண்மூன்(று) உடையமலை
அண்டர்களும் காண்டற்(கு) அரியமலை - தொண்டர்க்குத்
தோற்றுமலை நாளும் தொழுவார் எழுபிறப்பை
மாற்றுமலை அண்ணா மலை.
இயற்கை வருணனை
வானத்துப் பூத்தருவை வாங்கிக் களிறுபிடி
பாளைக்கு நீட்டி அணிமலை

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணாமலையார்_வெண்பா&oldid=3286779" இலிருந்து மீள்விக்கப்பட்டது