குரு நமசிவாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குரு நமச்சிவாயர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குரு நமசிவாயர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார்.[1] இவர் குகை நமச்சிவாயரின் முக்கிய சீடர்களில் ஒருவராவார். இவர் அண்ணாமலை வெண்பா என்ற நூலை எழுதியுள்ளார்.[2]

குரு நமச்சிவாயரின் இயற்பெயர் நமசிவாயமூர்த்தி என்பதாகும்.

குரு நமச்சிவாயர் என்ற பெயரிடுதல்[தொகு]

ஒரு சமயம்

ஆல்பழுத்துப் பட்சியினுக் காகார மானதென
வேல் பழுத்து நின்ற நிலை வீணிலென" என்ற வெண்பாவை குகை நமச்சிவாயர் பாடினார். அந்தப் பாடலின் மீதத்தை நமசிவாயமூர்த்தியை பாடி முடிக்கும் படி கூறினார்.
"சாலவனச் செய்யா ஒருத்தருடன் சேர்ந்தும் இருப்பீரோ
ஐயா நமச்சிவா யா" என்று பாடலை முடித்தார். அதனைக் கேட்டு மகிழ்ந்த குகை நமச்சிவாயர் சீடரான நமசிவாய மூர்த்திக்கு "குரு நமச்சிவாயர்" என பெயரிட்டார்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "பராசக்தி படிவம் செந்தில் துறவி சுவாமிகள் அம்மன் தரிசனம்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-03-15.
  2. அண்ணாமலையார்கோவில் - திருவண்ணாமலை தமிழாய்வு தளம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_நமசிவாயர்&oldid=3550633" இலிருந்து மீள்விக்கப்பட்டது