மூக்குப் பொடி சித்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூக்குப் பொடி சித்தர்
பிறப்புவிழுப்புரம்
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்மொட்டையக் கவுண்டர்
மொழிதமிழ்
செல்வாக்குக்கு உட்பட்டோர்

மூக்குப் பொடி சித்தர் (இறப்பு:09 டிசம்பர் 2018) [1] என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார். இவருடைய பெயர், ஊர் என எந்த தகவல்களும் தெரியாததால், மூக்குப் பொடி போடும் பழக்கம் இருந்தால் மூக்குப் பொடி சித்தர் என்று அழைக்கப்பட்டார். தினகரன், புதுவை முன்னாள் முதல்வர் இரங்கசாமி ஆகியோர் இவரின் பக்தர்களாக அறியப்பட்டனர்.[2] இவரை காண வரும் பக்தர்கள் இவருக்கு மூக்கிப் பொடியை காணிக்கையாகத் தந்தனர்.

சித்தரின் வரலாறு[தொகு]

மூக்குப் பொடிச் சித்தரின் இயற்பெயர் மொட்டையக் கவுண்டர் ஆகும். இவர் விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள இராஜபாளையம் என்ற ஊரில் பிறந்தார்.[3] இவரின் மனைவி இறந்த பிறகு திருவண்ணாமலை வந்தார். சிதம்பரத்தில் அதிக நாட்கள் இவர் தங்கிருந்ததாக செய்திதாளில் குறிப்பிடப்படுகிறது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் மூக்குப் பொடிச் சித்தரை சந்தித்தை ஊடகங்கள் அதிகம் கவனம் கொடுத்தன. அதன் பின் மூக்குப் பொடி சித்தர் அனைவரும் அறிந்தவர் ஆனார். இவர் டிசம்பர் 09, 2018 அதிகாலை நான்கு மணி அளவில் இறுதியாக தங்கிருந்த கிரிவலப்பாதையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் இறந்தார்.

மகிமைகள்[தொகு]

கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் புயலால் சேதமாகும் என்பதையும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் முன்கூட்டியே இவர் கூறியுள்ளார். இவர் ஓரிடத்தில் தங்காமல் அடிக்கடி வேறு வேறு இடங்களில் தங்கி வந்தார். நினைவு தெரிந்து சித்தர் குளிப்பதே இல்லை எனவும், இருந்தும் அவருடைய உடலில் இருந்து நறுமண வாசனை வருவதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர். சித்தரின் பார்வை பட்டாலே நல்லது நடக்கும் என பக்தர்கள் நம்பினர். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அரசியல் பிரபலங்கள் மூக்குப் பொடி சித்தரின் பக்தர்களாக இருந்தனர்.[4]

ஆதாரங்கள்[தொகு]

  1. "ஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்". விகடன் (09 டிசம்பர் 2018)
  2. "தினகரனிடம் திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் சொன்னது என்ன?!".விகடன் (11 ஆகத்து, 2017)
  3. "திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் காலமானார்".
  4. "மூக்குப்பொடி சித்தரைக் காண வெளி மாநில பக்தர்கள் வருகை". தினமலர் (22 டிசம்பர், 2015)

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்குப்_பொடி_சித்தர்&oldid=3789265" இலிருந்து மீள்விக்கப்பட்டது