மச்சிலிப்பட்டணம்
మచిలీపట్నం மச்சிலிப்பட்டணம் | |||||||
— நகரம் — | |||||||
அமைவிடம் | 16°10′N 81°08′E / 16.17°N 81.13°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் | ||||||
மாவட்டம் | கிருஷ்ணா | ||||||
ஆளுநர் | எசு. அப்துல் நசீர்[1] | ||||||
முதலமைச்சர் | ஜெகன் மோகன் ரெட்டி[2] | ||||||
MP[3] | கொனகல்ல நாராயணா | ||||||
மக்கள் தொகை |
183,370 (2001[update]) • 6,875/km2 (17,806/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
26.67 கிமீ2 (10 சதுர மைல்) • 14 மீட்டர்கள் (46 அடி) | ||||||
குறியீடுகள்
|
மச்சிலிப்பட்டணம் (Machilipatnam, தெலுங்கு: మచిలీపట్నం, ⓘ; பிரித்தானிய ஆட்சியில் மசூலிப்பட்ணம் என்றிருந்தது, உள்ளூர் வழக்கில் பந்தர் - துறைமுகம்) ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஓர் சிறப்புநிலை நகராட்சி ஆகும். மாநிலத் தலைநகர் ஐதராபாத்திலிருந்து தென்கிழக்கே 347 கிலோமீட்டர்கள் (216 mi) தொலைவில் உள்ளது.
முதன் முதலில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பேனியினர், 1611-ஆம் ஆண்டில் இங்கு வணிகம் செய்ய தொழிற்கூடங்களை அமைத்தனர்.
வரலாறு
[தொகு]தொலெமியின் கூற்றுப்படி இந்த நகரம் கி.மு 3வது நூற்றாண்டு (சாதவாகனர் காலம்) முதலே மைசோலோசு என்ற பெயரில் இருந்துள்ளது. கி.மு முதல் நூற்றாண்டுக்கால எரித்ரியன் கடல்வழி பெரிபிளசு என்னும் கடல்வழி பயண ஆவணத்தில் மசலியா என்றுக் குறிப்பிடப்பட்டுள்ளது.[4] இந்தியாவின் தென்கிழக்கில் கோரமண்டல் கரையில் கிருஷ்ணா ஆறு வங்காள விரிகுடாவில் சேருமிடத்தில் அமைந்துள்ள இந்தத் துறைமுக நகரம் அக்காலத்திலிருந்தே கடல் வாணிகத்திற்கு புகழ் பெற்றிருந்தது. பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி தனது முதல் தொழிற்சாலையை இங்கேயே அமைத்தது. பதினேழாம் நூற்றாண்டில் பிரெஞ்சு, பிரித்தானிய, டச்சு வணிகத்திற்கு முக்கியமான மையமாக விளங்கியது.
பொருளாதாரம்
[தொகு]வெண்கலம், வெள்ளி, இரும்பு, துத்தநாகம் கலந்த உலோகம் மீது தங்க முலாம் பூசப்பட்ட நகைகள் உற்பத்தி செய்யும் தொழிலில் 230 பிரிவுகளில் 3,000 பேர் பணிபுரிகின்றனர். இத்தொழிலின் ஆண்டு வருவாய் ரூபாய் 230 கோடிக்கும் அதிகமாகும். [5]
மீன் வணிகம் சிறப்புற விளங்கும் இந்தத் துறைமுகத்தில் 350 மீன்பிடி படகுகள் இருக்கலாம். இங்கு தரைவிரிப்பு நெய்யும் தொழில் முனைப்பாக உள்ளது. இங்கு விற்கப்படும் பிற பொருள்களாக அரிசி, எண்ணெய் வித்துக்கள், அறிவியல் உபகரணங்கள் உள்ளன. தொடர்வண்டி முனையமும் கல்வி நிலையங்களும் உள்ளன. 1923 முதலே ஆந்திரா வங்கிக்கு இங்கு கிளை உள்ளது.
வங்காள விரிகுடாப் பகுதியில் அடிக்கடி நேரும் சூறாவளிகளால் ஏற்படும் கடல் சீற்றத்தால் இந்தப் பகுதி பாதிப்படைந்து வந்துள்ளது. 2004 ஆழிப்பேரலையின்போது மச்சிலிப்பட்டணமும் சுற்றுப்புற மீனவச் சிற்றூர்களும் பெரிதும் பாதிப்படைந்தன. அரசும் அரசல்லா தன்னார்வல அமைப்புக்களும் மீள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ Election Commission of India
- ↑ The Great Stupa at Nagarjunakonda in Southern India
- ↑ இமிடேஷன் ஜுவல்லரிக்கு புகழ்பெற்ற ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம்
வெளியிணைப்புகள்
[தொகு]- மச்சிலிப்பட்டணம் தகவல்கள் பரணிடப்பட்டது 2018-03-19 at the வந்தவழி இயந்திரம்
- ஆந்திர அரசின் கிருஷ்ணா மாவட்டம் குறித்த தகவல் கோப்பு பரணிடப்பட்டது 2014-12-13 at the வந்தவழி இயந்திரம்
- ஆந்திரப் பிரதேச சுற்றுலாத்துறை
- மாங்கினபுடி கடற்கரை பற்றி ஆந்திரப் பிரதேச சுற்றுலாத்துறை
- கிருஷ்ணா மாவட்ட வரலாறு பரணிடப்பட்டது 2010-12-20 at the வந்தவழி இயந்திரம்
- சென்னைஆன்லைன்.கொம்– கலம்காரி– தொன்மையான கண்கவர் கைவினை பரணிடப்பட்டது 2007-07-03 at the வந்தவழி இயந்திரம்
- "கலம்காரி" பரணிடப்பட்டது 2012-03-22 at the வந்தவழி இயந்திரம் - ஆர்.எல். செப்
- கலம்காரி கலை – கையச்சு துணிகளின் தற்கால பார்வை
- மச்சிலிப்பட்டணத்தின் வானிலை – எம்எஸ்என்.கொமிலிருந்து பரணிடப்பட்டது 2010-08-12 at the வந்தவழி இயந்திரம்