அரக்கு பள்ளத்தாக்கு
அரக்குப் பள்ளத்தாக்கு
అరకు లోయ | |
---|---|
மலை வாழிடம் | |
![]() அரக்குப் பள்ளத்தாக்குக் காட்சி | |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | விசாகப்பட்டினம் |
ஏற்றம் | 910 m (2,990 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
PIN | 531 149 |
தொலைபேசிக் குறியீடு | 08936 |
அரக்கு பள்ளத்தாக்கு என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைவாழிடமும், நிர்வாகப் பிரிவும் ஆகும். இது காடுகள் அடர்ந்த அழகிய பகுதியாக இருப்பதால் விசாகப்பட்டிணம் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. மேலும் இப்பகுதி காப்பித் தோட்டங்களுக்கும் பெயர் பெற்றது. இது கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 911 மீட்டர் உயரத்தில் உள்ளது.
அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள 30 போரா குகைகள் நூற்றாண்டுகளுக்கு மேலாக அழகிய கற்களின் மடிப்புகளைக்கொண்டுள்ளது. இவைகள் 705 மீட்டர் உயரத்தில், உலகின் மிகப்பெரிய குகைகளுள் ஒன்றாக உள்ளது. கோஸ்தனி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த குகைகளை அழகிய மலைகளும் சூழ்ந்துள்ளன.[1]
இப்பள்ளத்தாக்கு விசாகபட்டிணத்தில் இருந்து 116 கிலோமீட்டர் தொலைவில் ஒடிசா எல்லையில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இதன் பரப்பளவு தோராயமாக 36 சதுர கிலோ மீட்டர்கள்.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]
- Araku Valley Pictures of Tribal museum, horticulture nursery, tribal dancing & Borra caves
- Katiki Water Falls, Chaparai Water Cascade
- Araku Valley, Resorts, Waterfalls, Photo Gallery & Location