ஆந்திரப் பிரதேச அரசு சின்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆந்திரப் பிரதேச அரசு சின்னம்
விபரங்கள்
பாவிப்போர்ஆந்திரப் பிரதேச அரசு
உள்வாங்கப்பட்டது14 நவம்பர் 2018
Crestஇந்திய தேசிய இலச்சினை
Torseதர்மசக்கரம்
விருதுமுகம்புனா கட்டகா, தர்மசக்கரம்
குறிக்கோளுரை"சத்யமேவ ஜெயதே", சமசுகிருதம் for "Truth Alone Triumphs")
Earlier versions


ஆந்திரப் பிரதேச அரசு சின்னம் (Emblem of Andhra Pradesh) என்பது இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் அரசு முத்திரை ஆகும்.[1]

வரலாறு[தொகு]

1956 ஆம் ஆண்டில், ஐக்கிய ஆந்திரப் பிரதேசம் உருவான பிறகு, ஆந்திரப் பிரதேச அரசு 2,500 ஆம் ஆண்டு புத்த ஜெயந்தியின் போது அசோகச் சக்கரம் மற்றும் நான்கு சிங்கத் தலைகளுடன் அமராவதி ஸ்தூபியில் உள்ள பூர்ணகதம் ஆகியவற்றை அதன் அதிகாரப்பூர்வ சின்னமாக ஏற்றுக்கொண்டது.[2] இந்த சின்னத்தின் மையத்தில் அலங்கரிக்கப்பட்ட வட்ட வடிவ சட்டத்திற்குள் பூர்ணகதம். அதற்கு அடுத்து ஒரு வட்டத்தில் சூரியக் கதிர்கள். அதன் கீழே வெளி வளையத்தின் மீது இந்திய தேசிய இலச்சினையான சிங்கச் சின்னம் இடம்பெற்றது. வெளிவ வட்டத்தில் உச்சியில் "ஆந்திர பிரதேச அரசு" என தெலுங்கிலும், வெளிவட்டத்தின் பக்கவாட்டுகளில் மாநிலத்தின் பெயரானது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்றன. வெளிவட்டத்துக்கு அடியில் தேவநகரியில் "சத்யமேவ ஜெயதே" என்ற முழக்கம் இடம்பெற்றது.[3] ஆனால் பின்னர் இந்தச் சின்னத்தின் மையத்தில் சின்னம் பூரணகும்பமாக மாற்றப்பட்டது.

தற்போதைய வடிவமைப்பு[தொகு]

2014 ஆம் ஆண்டு மாநிலம் பிரிக்கப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆந்திரப் பிரதேச அரசு 14 நவம்பர் 2018 அன்று அதன் புதிய சின்னத்தை அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காக இறுதி செய்தது. நா. சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசாங்கம், அமராவதி கலைப் பள்ளி[4][5] மூலம் ஈர்க்கப்பட்டு, 'தம்ம சக்கர'த்தைக் கொண்ட புதிய அரசு சின்னத்தை ஏற்றுக்கொள்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது. தம்ம சக்கரமானது இறகு வடிவ இலைகள் கொண்டதாக ‘திரிரத்ன’ வளையம் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும். வெளி வட்டத்தில் ஆந்திரப் பிரதேசத்தைக் குறிப்பிடும் எழுத்துகள் தெலுங்கு, ஆங்கிலம், சமஸ்கிருதத்தத்தில் எழுதப்பட்டிருக்கும். இந்தச் சின்னமானது 24 மி.மீ.க்கும் குறைவான உயரத்தில் இருக்கக் கூடாது என்றும் அதிகாரப்பூர்வ வெளியீடு கூறியது.[6] புதிய சின்னத்துகாக சமர்ப்பிக்கப்பட்ட 300 சின்னங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சின்னத்தை உருவாக்கியவர் நெல்லூரைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் சூரிசெட்டி ஆஞ்சினேயுலு என்பவராவார்.

அரசு பதாகை[தொகு]

ஆந்திரப் பிரதேச அரசு வெள்ளை நிறப் பின்புலத்தில் மாநிலத்தின் சின்னம் இடம்பெறும்.

மேற்கோள்கள்[தொகு]