சோமசீலா அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோமசீலா அணை என்பது ஆந்திரப்பிரதேசம் மாநிலம் நெல்லூர் மாவட்டம், சோமசீலா என்னுமிடத்தில் பெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இவ்வணையின் கட்டுமானப் பணி 1976-ம் ஆண்டு தொடங்கி, 1989-ல் நிறைவுபெற்றது.

சோமசீலா அணையின் மொத்த கொள்ளளவு 78 டி.எம்.சி. இதன் பாசனப் பகுதி 4.5 லட்சம் ஏக்கர். புதிய பாசனப் பகுதி 1.79 லட்சம் ஏக்கர். இந்த அணையில் இருந்து 15 டி.எம்.சி. தண்ணீர் தெலுங்கு கங்கைத் திட்டப்படி சென்னை குடிநீருக்காக திறந்துவிடப்பட்டு, கண்டலேறு அணைக்கு வந்து சேர்கிறது.[1] அங்கிருந்து பூண்டி ஏரிக்கு வந்து சேருகிறது.

மேற்கோள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-05. பார்க்கப்பட்ட நாள் 2015-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமசீலா_அணை&oldid=3556232" இலிருந்து மீள்விக்கப்பட்டது